அமைச்சர் பசில் ராஜபக்ச, சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்ப ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி!
Tuesday, March 15th, 2022
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு, அமைச்சர் பசில் ராஜபக்ச, சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்ப ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியை வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
நேற்றுதிங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் Changyong Rhee கொழும்பில் இலங்கை அரசாங்கத்துடன் சந்திப்பை நடத்தியுள்ளார்.
அவர் நேற்று நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடினார் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்திருந்தார்.
இதன்போது நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் குறித்த தமது மதிப்பீட்டை அவர் விளக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


