தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு!

Tuesday, November 16th, 2021

தேர்தல், வாக்கெடுப்பு முறைமை மற்றும் சட்ட விதிமுறை மறுசீரமைப்பை அடையாளங் காணவும் அது சம்பந்தப்பட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்குமான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் பதவிக்காலம் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சபை முதல்வர் தினேஸ் குணவர்த்தன முன்வைத்த யோசனைக்கு நேற்றையதினம் நாடாளுமன்றில் அனுமதி கிடைத்திருந்தது.

இந்தத் தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டம் கடந்த மே மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்றதுடன், அதன் அறிக்கை ஆறு மாதங்களில் முன்வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

புதுக்குடியிருப்புக்கு கடமைக்குச் செல்லும் அரச உத்தியோகத்தர்களுக்கு தனியாகப் பேருந்து வேண்டும்!
வெற்றிகரமான தடுப்பூசித் திட்டத்தால் பாடசாலைகள் செயற்படுகின்றன – இலவசக் கல்வியும் பாதுகாக்கப்பட்டுள்ள...
நாட்டில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட வேண்டுமானால் ஓர் அலகுக்கு 59 ரூபா அறவிட நேரிடும் - மானியம்...