நாட்டில் டொலர் தட்டுப்பாடு என்று எதுவுமில்லை – நிதியமைச்சர் பசில் தெரிவிப்பு!
Monday, July 26th, 2021
நாட்டில் டொலர் தட்டுப்பாடு என்று எதுவுமில்லை. டொலர் பற்றாக்குறை நிலவுகின்றது என்ற தோற்றத்தை டொலர் வியாபாரிகள் உருவாக்க முயல்கின்றனர் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளதாக அமைச்சர் சந்திரசேன தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சியில் உள்ளவர்களிற்கு டொலர் குறித்து எதுவும் தெரியாது அதேவேளை நாட்டில் டொலர் தட்டுப்பாடு நிலவுகின்றது என்பதை காண்பிப்பதற்கான முயற்சிகளில் சில டொலர் வர்த்தகர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவதானம் செலுத்த வேண்டும் - அமைச்சர் தயாசிறி !
யாழ்ப்பாண நகர்ப்பகுதியில் நாய்களின் தொல்லை அதிகம்!
தலிபான்கள் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் - ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தல்!
|
|
|


