தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவதானம் செலுத்த வேண்டும் – அமைச்சர் தயாசிறி !

Thursday, October 26th, 2017

தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை நடத்தி தீர்ப்பதில் முக்கிய அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து அரசியல் யாப்பு உள்ளிட்ட விடயங்களை மேற்கொண்டு வருகின்றன.தமிழ் மக்களுடன் இணைந்து கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இறுதி வாய்ப்பு இதுவாகவே அமையும்.இதனை உச்சமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதேநேரம், புதிய அரசியல் யாப்பில் ஒற்றையாட்சி முறைமை பாதுகாக்கப்படுதல் மற்றும் பௌத்தத்துக்கான முன்னுரிமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான நிலைப்பாடுகளை சதந்திர கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் வெளியிட்டுள்ளன.இவை குறித்து தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது.

ஆனால் இந்த விடயங்களை முன்வைத்து சில அடிப்படைவாதிகள் தங்களின் அரசியல் நலன் சார்ந்த பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் இவை ஒருபுறமிருக்க, தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிவகைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

Related posts: