அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் வறிய மக்களுக்கு மலசலகூடங்கள் அமைக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் மூலம் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பிரதேசத்தில் அடிப்படை வசதிகளற்ற வறிய குடும்பங்களுக்கு மலசல கூடங்கள் நிர்மாணித்து கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்ககப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கான குறித்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட குறித்த பயனாளர்களுக்கான மலசலகூட கட்டுமாணத்தக்காக நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளதை அடுத்து குறித்த கட்டுமாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த கட்டுமாணப் பணிகளை கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக செயலாளரும் யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான றீகன் இளங்கோ நேரில் சென்று பார்வையிட்டதுடன் அது தொடர்பாக கறித்த பயனாளிகளுடனும் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரசாங்க ஊழியர்களின் சம்பளம் வழங்கும் முறையில் மாற்றம்!
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
போக்குவரத்து பிரச்சினை அல்லாத பாடசாலைகளை 5 நாட்களும் நடத்த அவதானம் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|