அரசாங்க ஊழியர்களின் சம்பளம் வழங்கும் முறையில் மாற்றம்!

Thursday, February 9th, 2017

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் முறையில் மாற்றம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த தீர்மானம் ஒரு போதும் அரச சேவையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி அல்ல எனவும் இராஜாங்க, உள்ளூர் மற்றும் அரசாங்க தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரான செயலாளர் திலகரத்ன தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர்,

மாதாந்த சம்பளத்தை இரண்டு பிரிவாக வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. மாதாந்தம் 20ஆம் திகதி அல்லது 25 ஆம் திகதி சம்பளம் வழங்குவது சாதாரண முறையாகும்.

எனினும் இந்த முறையின் கீழ் ஆரம்ப சம்பளத்தை இந்த திகதியில் வழங்கிவிட்டு மாதத்தின் 5ஆம் அல்லது 10 திகதிகளில் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Money

Related posts: