அமைச்சரவை அனுமதி வழங்கியதும் விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு நாளாந்த கொடுப்பனவு அதிகரிப்படும் – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, August 29th, 2023

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவு அமைச்சரவை அனுமதி வழங்கியதும் அதிகரிப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைப்பத்திரம் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை அனுமதி கிடைத்தவுடன் உரிய தீர்மானம் உடனடியாக அமுல்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திங்கள் (28) மற்றும் செவ்வாய்க்கிழமை (29)  கடமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த 18 ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை  சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: