அமெரிக்க பாதுகாப்பு அமைச்சினால் இலங்கைக்கு வைத்திய உபகரணங்கள் வழங்கி வைப்பு!

Tuesday, October 18th, 2022

நாட்டின் அவசர மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சினால் சுகாதார அமைச்சிற்கு வைத்திய உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த வைத்திய உபகரணங்களை பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்ளுக்கு தேவையான வைத்திய உபகரணங்கள் அதில் அடங்குகின்றன.

இதேவேளை, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோருக்கிடையே நேற்றையதினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கருத்துரைத்த அமைச்சர், நாட்டு மக்களின் போசாக்கை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபடத் தடை - சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி !
சந்தைகளால் மேலும் பலருக்கு தொற்று ஏற்படலாம் - எச்சரிக்கிறார் வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்...
புதிய ஆண்டுக்கான பாதீட்டில் ஜனாதிபதித் தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபாயை ஒதுக்குங்கள் - நிதி அமைச்சி...

தாண்டிக் குளத்தில் பொருளாதார வலயம் அமைக்கப்படுவது பொருத்தமற்றது:    பேராசிரியர் ப.சிவநாதன்!
வறிய மாணவர்களின் கற்றல் ஊக்குவிப்புக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவை...
ஆசிய அபிவிருத்தி வங்கி 8 பில்லியன் நிதியுதவி - இன்றுமுதல் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு வைப்பிலி...