பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபடத் தடை – சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி !

Thursday, February 22nd, 2018

பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.செல்வகுமார் தெரிவித்தார்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளை அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் ஸ்ரிக்கர்கள் ஒட்டும் நிகழ்வு பொலிஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

இதன்போது முச்சக்கர வண்டி சாரதிகள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளைச் முச்சக்கர வண்டிகளை அடையாளம் காணும் வகையில் ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றது.

இனிவரும் காலங்களில் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த முச்சக்கர வண்டிகள் பதிவு மேற்கொள்ளாமல் சேவையில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் எமது போக்குவரத்துப் பிரிவினருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மீறி முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட்டால் முச்சக்கர வண்டிச் சாரதிகள், பொது மக்கள் எமக்குத் தெரியப்படுத்த முடியும். முச்சக்கர வண்டிச் சாரதிகள் அதிகளவில் மக்கள் சேவையில் ஈடுபடுவதால் சமூகத்துடன் நெருக்கமான தொடர்பினைக் கொண்டவர்களாக காணப்படுகிறார்கள். சமூகத்தில் இடம்பெறும் சட்டவிரோத சம்பவங்களைத் தட்டிக் கேட்க உங்களுக்கும் உரிமையுள்ளது.

பொலிஸ் துறையிலுள்ள எங்களை விட முச்சக்கர வண்டிச் சாரதிகளே அதிகளவில் மக்களுடன் இணைந்த வகையில் இரவு – பகலாக கஸ்டப்பட்டுச் சேவையில் ஈடுபடுகிறார்கள். எனவே, முச்சக்கர வண்டிச் சாரதிகள் தமது பொறுப்புணர்வு செயற்பட வேண்டும் என்றார்.

Related posts: