அனைவருக்கும் புத்தொளி வீசும் திருநாளாக தீபத் திருநாள் அமைய வேண்டும் – ஜனாதிபதி

Saturday, October 29th, 2016

உலகவாழ் இந்துக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் தீபத்திருநாள் அனைவருக்கும் புத்தொளி வீசும் தீபத் திருநாளாக அமைய வாழ்த்துகின்றேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டினதும் சமூகத்தினதும் சுபீட்சம் அந்த நாட்டில் நிலவுகின்ற சமாதானம் மற்றும் சகவாழ்வினாலேயே உறுதிப்படுத்தப்படுகின்றது. எனவே அனைவரது மனங்களிலும் சகவாழ்வும் நல்லிணக்கமும் மிளிரவேண்டும் என்பதே இன்றைய தீபாவளி தினத்தின் எமது பிரார்த்தனை என்றும்  ஜனாதிபதி வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இருளால் கொண்டுவரப்படும் தீமைகளாலும் இழப்புக்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு ஒளியைத் தேடிச் சென்ற மனிதன் தீமைகளுக்குப் பதிலாக நன்மையையும் அறியாமைக்கெதிராக அறிவையும் இழப்புகளுக்கு எதிராக நம்பிக்கையையும் வெற்றிகொள்ளும் உலகில் உண்மையிலேயே தீப ஒளியில் பிரகாசிக்கிறது.

பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டு மோதல்களும் அதனால் சமூகத்தின்மீது படர்ந்திருந்த இருளும் நீங்கிய இன்றைய சூழ்நிலையானது எமது சமூகத்தை இருளிலிருந்து ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி இட்டுச்செல்ல கிடைத்த பெறுமதியான வாய்ப்பாகுமெனக் கருதுகிறேன்.

ஐக்கியமென்பது இன்றைய உலகின் இருப்புக்குத் தேவையான அடிப்படை நிபந்தனையாகியுள்ள பின்னணியில், நாம் அனைவரும் ஆழமான பிணைப்புடனும் உண்மையான புரிந்துணர்வுடனும் செயற்படுவது அவசியமாகும். உலகவாழ் இந்துக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் இத் தீபத்திருநாள் அனைவருக்கும் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் ஒரு பண்டிகையாகவும் அவர்களது வாழ்வில் புத்தொளி வீசும் தீபத் திருநாளாகவும் அமைய வாழ்த்துகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

4af908a32d3992da1be54e5025193371_L

Related posts:

பயங்கரவாத தாக்குதலின் மூலம் உருவான சவாலை வெற்றிகொள்ள தொடர்ந்தும் முயற்சிக்கப்படும் - ஜனாதிபதி!
வீடமைப்பை ஆரம்பிக்கும் போதே குறித்த கட்டத்திற்கான தவணைக் கொடுப்பனவை செலுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகா...
இலங்கையுடன் தொடர்புபட்ட எந்தவொரு மூன்றாம் தரப்பினர் சார்ந்த விடயங்களிலும் தலையிட வேண்டாம் - மெரிக்கா...