தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை – டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Friday, May 31st, 2019

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலையை அடுத்து நாட்டின் பல மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு. கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் அனர்த்தம் உள்ள மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக டெங்கு அனர்த்தம் உள்ள மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் கூடுதலாக காணப்படுகின்றது. இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து கூட்டாக டெங்கு ஒழிப்பு விஷேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு பொது மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என டெங்கு ஒழிப்பு பிரிவு பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

Related posts:

இரு வாரங்களில் 19 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை - சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவிப்பு!
எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர்களை மத்திய வங்கி ஏற்றுக்கொள்ளும் - மத்திய வங்கியின் ஆளுநர் ஜனா...
குற்றவாளிகள் பொறுப்பை ஏற்று மனந்திருந்தினால் அவர்களை மன்னிக்க முடியும் - கொழும்பு பேராயர் கர்தினால் ...