நவீன மயமாக்கல் விவசாய திட்டம் – வவுனியாவின் நான்கு பிரதேச செயலக பிரிவுக்கும் தலா 25 மில்லியன் ஒதுக்கீடு – நாடாளுமன்ற உறுப்பினர் தீலீபன் தெரிவிப்பு!

Sunday, March 24th, 2024

நவீன மயமாக்கல் விவசாய திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலக பிரிவுகளுக்கும் தலா 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

நவீன மயமாக்கல் விவசாய திட்டத்தின் கீழ்  வவுனியா மாவட்டத்தில் பாலமோட்டையில் இயந்திரம் கொண்டு செத்தல் மிளகாய்  பதனிடும் திட்டத்தினை ஆரம்பித்து வைத்த விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் ஒரு பிரதேச செயலக பிரிவிற்கு மட்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியதுடன் ஏனைய மூன்று பிரதேச செயலக பிரிவுகளுக்கும், விவசாய நவீன மயமாக்கல் திட்டத்திற்கு நிதி ஒதுக்குவது அவசியம் என்றும் கோரிக்கை முன்வைத்திருந்தோம்.

எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் மஹிந்த அமரவீர உடனடியாகவே பொதுமக்கள் முன்னிலையில் மொத்தமாக 100 மில்லியன் ரூபாவினை வவுனியா மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்வதாக அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில் வவனழயா மாவட்டமத்தின் நான்கு பிரதேச செயலக பிரிவுக்கும் தலா 25 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: