அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் வசதிகளை வழங்குவதே, அரசாங்கத்தின் நோக்கம் – உலக நீர் தின நிகழ்வில பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!
 Wednesday, March 23rd, 2022
        
                    Wednesday, March 23rd, 2022
            
உலக நீர் தின நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் அலரி மாளிகையில் நேற்றையதினம் நடைபெற்றது.
இந்த ஆண்டு உலக நீர் தினத்தின் கருப்பொருள் ‘நிலத்தடி நீர்: புலப்படாததை புலப்படச் செய்யும்’ என்பதாகும்.
நீர் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பு, விவசாயம், கைத்தொழில், சூழல் கட்டமைப்பு மற்றும் காலநிலை மாற்றங்களின் தழுவலுக்கு நிலத்தடி நீரின் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது.
களுத்துறை மாவட்ட மக்கள் இதுவரை எதிர்நோக்கிய, குடிநீரில் கடல்நீர் கலக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் களுத்துறை, அகலவத்தை, மத்துகம நீர் வழங்கல் திட்டம் ஜனாதிபதியினால் இணையம் ஊடாக, மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
அனைவருக்கும் சுத்தமான நீரை வழங்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025இல் நாட்டின் அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் வசதிகளை வழங்குவதே, அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடல்நீரை மறுசுழற்சி செய்யும் திட்டம், யாழ்ப்பாணக் குடாநாட்டை மையப்படுத்திய வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அது செலவு அதிகமானது என்றாலும் வட மாகாண மக்களின் தாகத்தை தீர்ப்பதற்காக செயற்படுத்தப்பட வேண்டியதொன்றாகும் எனறும் பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        