அனைத்து பாடசாலைகளுக்கும் நாளைமுதல் 2 ஆம் தவணை விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Sunday, October 4th, 2020
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் 2 ஆம் தவணைக்கான விடுமுறை நாளை திங்கட்கிழமைமுதல் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முன்பதாக அனைத்து பாடசாலைகளுக்குமான 2 ஆம் தவணைக்கான விடுமுறை எதிர்வரும் வௌ்ளிக்கிழமைமுதல் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.
திவுலபிடிய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி படுத்த்ப்பட்டதை அடுத்து கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புக்களை ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
இதனை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள் அனைத்திற்கும் நாளைமுதல் 2 ஆம் தவணை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையின் வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியில் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா!
குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு மீளவும் தொற்று அறிகுறி - பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!
புதிய செறிமானம் அடங்கிய எரிவாயுவின் தரம் தொடர்பில் இன்று அறிவிக்கப்படும் - நுகர்வோர் இராஜாங்க அமைச்ச...
|
|
|


