அனைத்து இலங்கையர்களுக்கும் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு எனது அரசாங்கம் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து பெருமையடைகிறேன் – ஜனாதிபதி தெரிவிப்பு!
Monday, July 5th, 2021
தெற்காசியாவில் பைசர் தடுப்பூசிகளை பெற்ற முதல் நாடாக இலங்கை திகழ்கிறது என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அனைத்து இலங்கையர்களுக்கும் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு எனது அரசாங்கம் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து தான் பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியின் முதற்தொகுதி இன்று திங்கட்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளன. இதன்படி 26 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளன.
இது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ டுவிட்டரில் பதிவொன்றை பதிவு செய்துள்ளார். கறித்த பதிவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த பதியில் மேலும் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கப்பலை அழிப்பது குறித்து தீர்மானமில்லை - கனடா அரசாங்கம்!
இடமாற்றத்தில் பாதிக்கப்பட்ட நுண்கலைப்பாட ஆசிரியர்களை உடனடியாக சொந்த இடங்களுக்கு விடுவிக்க வேண்டும் -...
இபோலா தொற்று நோயை தடுக்க 02 மருந்துகள்!
|
|
|


