மின்தடையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நட்டஈடு -பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் செயலாளர்!

Tuesday, October 18th, 2016

மின்சக்தியின் தரம் தொடர்பிலான புதிய விதிமுறைகள் மற்றும் ஒழுங்குகளை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் செயலாளர் தமிந்த குமாரசிங்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

நாட்டின் மின்சார நடத்தை நியமனங்கள் மற்றும் பாதுகாப்புத் தேவை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் மின்சார நடத்தை, ஒழுங்கு விதிகள் பாதுகாப்பு தரம், தொடர்ச்சியான பயன்பாட்டு தேவை மற்றும் முகாமைத்துவம் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மின்சார தடை மற்றும் மின்வலு காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களுக்கு நட்ட ஈடுகளையும், வினைதிறன்மிக்க சேவைகளையும் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும் பல தீர்மானங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.இதன் மூலம் விநியோக முறையில் ஏற்படும் தரப்பிரச்சினையினால் சாதனங்களுக்கு ஏற்படும் நட்ட ஈட்டை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கூறினார்.

CEB-2

Related posts: