அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடன் கிரிக்கெட் சபை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்!
Wednesday, November 8th, 2023
நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடன் இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு சபை இணக்கம் தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் சபையை கலைத்து இடைக்கால குழுவை நியமிப்பது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்தார்.
அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், கிரிக்கெட் நிறுவனம் தொடர்பாக விவாதம் நடத்தி வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதன் பிரகாரம் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டி அது தொடர்பில் முடிவெடுப்பதற்கு இரு தரப்பும் இணக்கம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஜப்பானுக்கு வருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு!
உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை - இராணுவ...
ஜனாதிபதி யோசனை - பிரத்தியேக தரவுப் பாதுகாப்பு சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி!
|
|
|


