அனுமதிப்பத்திரங்களை அத்தாட்சிப்படுத்துவதற்கு 3 நாள் அவகாசம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களின் அனுமதிப் பத்திரங்களை அத்தாட்சிப்படுத்துவதற்காக 3 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது..
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் 20, 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் அனுமதிப்பத்திரங்களை அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு, பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு இணங்க இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கைக்கு நேராக உச்சம் கொள்ளும் சூரியன்!
5 ஆண்டுகளில் 39 தடவை வெளிநாட்டு பயணம் செய்த நாடாளுமன்ற உயர் அதிகாரி!
பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதல்: பள்ளிவாசலில் இருந்த 30 பேர் பலி – 50 க்கும் அதிகமானோர் காயம்!
|
|