5 ஆண்டுகளில் 39 தடவை வெளிநாட்டு பயணம் செய்த நாடாளுமன்ற உயர் அதிகாரி!

Wednesday, September 18th, 2019


நாடாளுமன்ற உயர் அதிகாரியொருவர் 2014 தொடக்கம் 2019 வரையான ஐந்து ஆண்டுகளில் 39 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக உள்ளக அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்காக அரசாங்கத்துக்கு சுமார் 23 மில்லியன் ரூபா செலவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

விமான டிக்கெட்டுக்காக 6.7 மில்லியன் ரூபாவும், பயண செலவுகளுக்காக 16 மில்லியன் ரூபாவும் இந்த தொகையினுள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரி கடந்த 2014 ஆம் ஆண்டில் 7 தடவையும், 2015 ஆம் ஆண்டில் 5 தடவையும், 2016 ஆம் ஆண்டில் 7 தடவையும், 2017 ஆம் ஆண்டில் 8 தடவையும், 2018 ஆம் ஆண்டில் 10 தடவையும் மற்றும் இந்த ஆண்டில் இதுவரை இரு தடவையும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜேர்மனி, நியூசிலாந்து, நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கே அவர் இவ்வாறு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அங்கு அவர் பல்வேறு பயற்சிப் பட்டறை மற்றும் கருத்தரங்குளில் கலந்து கொண்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: