தீவகத்திற்கென தனியான போக்குவரத்து சாலை உருவாக்கப்டபட வேண்டும் – ஈ.பி.டி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகனின் கோரிக்கைக்கு போக்குவரத்து அமைச்சர் இணக்கம்!

Thursday, March 18th, 2021

தீவகத்தின் போக்கவரத்து தொடர்பில் அதிக அக்கறை செலுத்தப்பட வெண்டும் என்பதுடன் அப்பிரதேசத்தை மையப்படுத்தி தனியான ஒரு போக்குவரத்து சாலை உரவாக்கப்பட வேண்டும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தீவக பிரதேச இணைப்பாளருமான வேலும்மயிலும் குகேந்திரன் (ஜெகன்) கோரிக்கை விடுத்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார அபிவிருத்திக் குழு கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும்  கூறுகையில் –

தீவக பிரதேச மக்கள் போக்குவரத்து சீரின்மையால் பல அசௌகரியங்களை நாளாந்தம் எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக போக்குவரத்து சேவையை விஸ்தரிக்கப்பட்ட ஒரு சிறந்த சேவையாக மேற்கொள்ள அனலைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு ஆகிய பிரதேசங்களுக்கு புதிய பஸ் வண்டிகள் போதாதுள்ளது. இது நிவர்த்தரிசெய்யப்பட வேண்டும்.

அத்துடன் வேலணை ஊர்காவற்றுறை நெடுந்தீவை உள்ளடக்கிய தீவக பிரதேசத்திற்கு  நிரந்தரமான போக்குவரத்து சாலை ஒன்றும் அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான காண ஏற்கனவே ஒதுக்கப்பட்டள்ளது என்றும் போக்குவரத்து அமைச்சரிடம் ஜெகன் கோரிக்கை விடுத்திருந்தார்.

குறித்த பிரச்சினையை கருத்திற்கொண்ட போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தனை உருவாக்கவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளுமாறும் பேருந்து பற்றாக்கறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் துறைசார் அதிகாரிகளுக்கு பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: