இலங்கைக்கு நேராக உச்சம் கொள்ளும் சூரியன்!

Monday, August 28th, 2017

இம்மாதம் 27 ஆம் திகதிமுதல்  அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம்  கொடுக்கும் சாத்தியம் காணப்படுவதாக. வளிமண்டலவியல் திணைக்களம் தொவித்துள்ளது.

இன்று நாவலடி, சாலை, பெரிய பரந்தன் ஆகிய இடங்களில் நண்பகல் 12.12ற்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தொவித்துள்ளது.

இதேவேளை நாளை மறுதினமும் நாட்டின் தென்மேற்குப் பிரதேசங்களில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை சற்று அதிகரிக்கலாம் என் திணைக்களம் அறிவித்துள்ளது.மேல் சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில வேளைகளில் மழை பெய்யும். இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சுமார் 50 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும பல இடங்களில் மழை பெய்யலாம்.

இடையிடையே நாட்டை ஊடறுத்து குறிப்பாக வடக்கு, வடமத்திய. வடமேல், கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், மாத்தறை,ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வீசும் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீற்றராக அமைந்திருக்கும் என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: