சுகாதார சேவைகளுடன் தொடர்புடைய பல சேவை நடவடிக்கைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி வெளியானது அதி விசேட வர்த்தமானி !

Wednesday, February 14th, 2024

சுகாதார சேவைகளுடன் தொடர்புடைய பல சேவை நடவடிக்கைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்  உத்தரவின் பேரில் இந்த வர்த்தமானி  அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் போன்றவற்றில் நோயாளிகளின் பராமரிப்பு, வரவேற்பு, உணவு, சிகிச்சை போன்றவற்றிற்கு தேவையான அனைத்து சேவைகள், அவசியமான உழைப்பு அல்லது தேவையான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக அறிவித்து குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார பணியாளர்களின் வேலைநிறுத்தத்தினையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: