சீரற்ற காலநிலை – மன்னாரில் 319 குடும்பங்களைச் சேர்ந்த 1146 பேர் பாதிப்பு – மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவிப்பு!

Wednesday, December 1st, 2021

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக, மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் 319 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 15 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் தலைமன்னார் கிராமம் பகுதியில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேரும் சௌத்பார் பகுதியில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேரும் எழுத்தூர் கிராமத்தில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேரும் எமில் நகர் பகுதியில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 183 பேரும் பேசாலை மேற்கு பகுதியில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேரும் பேசாலை தெற்கு பகுதியில் 36 குடும்பங்களைச் சேர்ந்த 123 பேரும் தலை மன்னார் ஸ்ரேஸன் பகுதியில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேரும் துள்ளுக்குடியிருப்பு பகுதியில் 56 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேரும்  ஓலைத் தொடுவாய் பகுதியில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 118 பேரும் தோட்டவெளி பகுதியில் 37 குடும்பங்களைச் சேர்ந்த 123 பேரும் பெரிய கரிசல் பகுதியில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேரும் சிறுத்தோப்பு பகுதியில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 113 பேரும்  மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு, இடம் பெயர்ந்துள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த 319 குடும்பங்களைச் சேர்ந்த  ஆயிரத்து 146 பேர்,  தங்களது பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 15 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான அத்தியாவசிய உதவிகளை மாவட்டச் செயலகம் ஊடாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பிரதேச செயலகம் மற்றும் கிராம அலுவலர்கள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: