அந்நிய செலாவணி பற்றாக்குறை – சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர அறிவிப்பு!

Friday, October 7th, 2022

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று மீண்டும் மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி துறை அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

இரண்டு கப்பல்களிலிருந்து தரையிறக்கப்பட்ட மசகு எண்ணெய்யினை பயன்படுத்தி இதுவரை சப்புகஸ்கந்த மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை செயற்படுத்தி வந்துள்ளோம்.

எனினும், மூன்றாவது கப்பல் இலங்கைக்கு வந்துள்ளபோதும், அதற்கு செலுத்துவதற்கு அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கப்பலுக்கான அன்னிய செலாவணியை மத்திய வங்கி ஒதுக்கியதும், குறித்த கப்பலின் எண்ணெய் இறக்கப்பட்டு, சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயற்படும் இதன் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அமைச்சர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சிறுவர் துஷ்பிரயோகத்தைக் கட்டுப்படுத்த அனைத்துத் தரப்புக்களின் ஒத்துழைப்புக்களும் அவசியம்: யாழ். மாவ...
முகக் கவசங்கள் அணிவதால் மட்டும் கொரோனா தொற்றை தடுத்துவிட முடியாது - உலக சுகாதார அமைப்பு !
இலங்கை நிதி தொடர்பான கோரிக்கையை விடுத்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் - சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்ப...