பிரதியமைச்சர் தெவரப்பெரும தற்கொலை முயற்சி!
Thursday, June 30th, 2016
பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும மின்விசிறியில், தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சிசெய்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
களுத்துறையில் உள்ள பாடசாலையொன்றுக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் ஏற்பட்டிருந்த பிரச்சினை காரணமாக, குறித்த பாடசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்த பிரதியமைச்சர், அவ்வார்ப்பாட்டத்தை உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றினார்.
அவருடைய கோரிக்கைகளுக்கு உரிய முறையில் பதில் கிடைக்காமையை அடுத்தே அவர் மின்விசிறியில், கழுத்தை கட்டிகொண்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Related posts:
திருமலையில் பழங்குடி மக்கள் போராட்டம்!
வேட்புமனு கோருவதற்கான நடவடிக்கை ஆரம்பம்!
பிரித்தானிய எண்ணெய் கப்பலை கைப்பற்றியது ஈரான்!
|
|
|


