வேட்புமனு கோருவதற்கான நடவடிக்கை ஆரம்பம்!

Monday, November 13th, 2017

உள்ளுராட்சிமன்றங்களுக்கான உறுப்பினர் எண்ணிக்கை உள்ளடக்கப்பட்ட வர்த்தமானி அறிவிக்கப்பட்டள்ள நிலையில், தேர்தலுக்கான வேட்புமனு கோருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தள்ளது

ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம். எம். மொகமட் தெரிவித்தள்ளார்.

எதிர்வரும் 27 ஆரம்பமாகின்ற வாரநாட்களில் வேட்புமனு கோரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளா

வேட்டுமனு கோரப்பட்ட தினத்தில் இருந்து இரண்டு வார காலம் வேட்பாளர்களுக்கான வேட்பு மனு தயாரிப்பு பணிகளுக்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ள அதேவேளை, வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்காக மூன்றரை நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என மேலதிக ஆணையாளர் குறிப்பிட்டார்.

இந்த செயற்பாடுகளுக்கு அமைய உள்ளுராட்சிமன்ற தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது

Related posts: