ஒக்டோபர் 25 ஆம் திகதி நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை – கல்வி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!
Friday, October 21st, 2022
தீபாவளியை முன்னிட்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தினை அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 24 ஆம் திகதி தீபாவளி தினம் என்பதால், அதனையடுத்த தினமான செவ்வாய்க்கிழமை மாணவர்களின் வரவில் வீழ்ச்சி காணப்படும் என்பதை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதற்கு பதிலீட்டு நாளாக ஒக்டோபர் 29 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
விடுவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பயன்தரும் மரங்கள் களவாடப்பட்டு வருவதாக மக்கள் கவலை!
2023 வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!
ஒகஸ்ட் மாதம்முதல் மீற்றர் பொருத்துவது கட்டாயம் - யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் வாடகை சேவையில் ஈடுப...
|
|
|


