விடுவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பயன்தரும் மரங்கள் களவாடப்பட்டு வருவதாக மக்கள் கவலை!

Monday, April 16th, 2018

உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பயன்தரும் மரங்கள் களவாடப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறு  விடுவிக்கப்பட்ட மயிலிட்டி கட்டுவன் மற்றும் தென் மயிலை ஆகிய பகுதிகளிலுள்ள பொது மக்களின் காணிகளுக்குள் இருக்கும் பயன்தரும் மரங்களை திருடர்கள் இயந்திரங்கள் மூலம் அறுத்தெடுத்துக் கொண்டு தப்பிச் செல்வதாகவும் இதனால் தாம் மீளக் குடியமறும் பட்சத்தில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய அவலம் ஏற்பட்டிருப்பதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அறுக்கப்படும் மரங்கள் வாகனங்களின் உதவியுடன் யாழ்ப்பாணத்தின் பொன்னநகர் பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதாகவம் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக காணிகளுக்குச் சொந்தமானோர் வெளிநாடுகளிலும் பிற இடங்களிலும் வாழ்ந்து வரும் நிலையில், அக் காணிகளிலுள்ள மரங்களே இவ்வாறு களவாடப்பட்டு வருவதாகவும் பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனிடையே இரும்பு வியாபாரிகள் அங்கு சேதமடைந்து அல்லது அழிவடைந்துள்ள வீடுகளில் காணப்படும் ஜன்னல்கள் மற்றும் தூண்களை இடித்து அழித்து கம்பிகளை களற்றி வருவதாகவும் இந்த சம்பவங்கள் தொடரும் பட்சத்தில் தாம் மிகுந்த நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய அவலம் ஏற்பட்டு வருவதாகவும் இது விடயம் தொடர்பில் பொலிஸார் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: