எல்லாமே தவறாக நடப்பது போன்றே தற்போது தோன்றலாம் – பொறுமையோடு என்னில் நம்பிக்கை வையுங்கள் – புரட்சிகரமான மாற்றத்தை நிச்சயமாக பெற்றுத்தருவேன் – ஜனாதிபதி அதெரிவிப்பு!

Tuesday, November 9th, 2021

இன்று என்னை விமர்சிப்பவர்கள் இரண்டு தரப்பினர் உள்ளனர். ஒரு தரப்பு கடந்த 02 வருடங்களைப்பற்றி புரிந்து கொள்ளாதவர்கள். அவர்கள் நினைக்கிறார்கள் கடந்த இரண்டு வருடங்கள் சாதாரணமான நிலையைக் கொண்ட வருடங்கள் என்று. ஆனால், நான் மட்டுமன்றி முழு உலகத் தலைவர்களும் கொவிட் தொற்று நோய் பரவிய இந்த இரண்டு வருடங்களில் பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்தோம்.

அடுத்த தரப்பினர், புரட்சிகரமான மாற்றத்துக்காக என்னிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அந்த மாற்றத்தை செயற்படுத்தும் போது பலருக்கு விருப்பமில்லை. அவ்வாறு உள்ளவர்கள் தான் என்னை விமர்சிக்கிறார்கள்.

இந்த நாட்டை பத்து தடவைகளுக்கும் மேல் மூடவேண்டி ஏற்பட்டது. இவ்வாறான நிலைமையில் எனக்கு பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த முடியுமா? அந்த நிலையைப் பற்றி பலர் புரிந்து கொள்வதில்லை. அடுத்தவர்கள் புரிந்துகொள்ள அவர்கள் விடுவதுமில்லை. அவ்வாறான நிலைமையின் மத்தியில் தான் கடந்த இரண்டு வருடங்கள் ஆட்சி செய்தேன்.

கொவிட் நோய்த்தொற்றின் காரணமாக – 05 பில்லியன் டொலர்கள் வெளிநாட்டு அந்நிய செலாவணியை தந்துவந்த சுற்றுலாத்துறை முழுமையாக வீழ்ச்சியை கண்டது. எம்மைப் போன்ற சிறிய பொருளாதார நிலையில் உள்ள ஒரு நாடு 05 பில்லியன் டொலர்களை இழப்பது, பொருளாதாரத்துக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

உயர் தரத்திலான ஹோட்டல்கள் முதல், இளநீர் விற்பனை செய்கின்ற நபர்கள் வரை 03 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களின் வருமானம் முழுமையாக வீழ்ச்சி கண்டது.

இவ்வாறு பொருளாதாரம் வீழ்ச்சி கண்டாலும், கடந்த அரசாங்கம் வாங்கிய கடன்களை, வருடத்துக்கு 04 பில்லியன் டொலர்களை நாம் திருப்பிச் செலுத்த வேண்டி ஏற்பட்டது. நாம் இந்த இரண்டு வருடத்துக்குள் அக்கடனையும் செலுத்தினோம். மிகவும் குறைந்த நிதி கையிருப்புடனேயே கடந்த அரசாங்கம் எமக்கு இந்த நாட்டைக் கையளித்தது.

அவ்வாறு இருந்தாலும், நாம் அரச ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து அவர்களை வீட்டிலேயே தங்க வைத்தோம். இணைய வழியில் கடமையாற்றச் செய்தோம். நாம் அவர்களின் சம்பளத்தை நிறுத்தவில்லை. அவர்கள் அனைவருக்கும் சம்பளத்தை வழங்கினோம்.

ஆசிரியர்கள் இரண்டு வருடங்களாக வீட்டிலேயே இருந்தனர். நாம் அவர்களுக்கும் சம்பளத்தை வழங்கினோம். கொவிட் நோய்த் தொற்றுக்குள்ளாகும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நாம் பணத்தை வழங்கினோம். இவ்வாறான கஷ்டமான நிலைமையிலும் நாம் மக்களை வாழவைக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டோம்.

இன்று விவசாயிகள் என்று ஒரு குழுவினர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால், விவசாயிகளை வாழ வைத்தது எந்த அரசாங்கம் என்று அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நான் அதிகாரத்துக்கு வரும் போது, 25 ரூபாய்க்குகூட நெல்லை விற்க முடியாத நிலை காணப்பட்டது. “எமக்கு குறைந்தது 40 ரூபாயாவது தாருங்கள்” என்று, ஒரு விவசாயி கூறுவதை நான் செய்திகளில் பார்த்தேன். நாம் அதனைவிட அதிகமாக வழங்கினோம்.

அதேபோன்று, அன்று உரத்துக்கும் பணம் செலுத்தினர். நான் ஆட்சிக்கு வந்து உரத்தை இலவசமாக வழங்கினேன். அன்று 25 ரூபாய்க்கு விற்க முடியாதிருந்த நெல்லுக்கு 50 ரூபாய் நிர்ணய விலையை வழங்கினேன்.

அறுபத்து ஒன்பது இலட்சம் மக்கள் எனக்கு வாக்களித்தது, என்னுடைய முகத்தைப் பார்த்து அல்ல. “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் மூலம் நான் முன்வைத்த கொள்கைகளுக்கே ஆகும்.

அக்கொள்கைகளில் தெளிவாக குறிப்பிட்டேன், நாம் பசுமை விவசாயத்தை நோக்கி செல்வோம் என்று தெளிவாகக் குறிப்பிட்டோம். இந்நாட்டில் சேதனப் பசளை உற்பத்தி செய்வோம் எனவும் நாம் கூறினோம். நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்வோம் எனவும் நாம் கூறினோம்.

நாம் வாக்குறுதியளித்தது மிகவும் கடினமானதொரு விடயத்தையாகும். அதுனால் தான் நான் கூறினேன், நீங்கள் மாற்றத்தை கேட்டீர்கள் என்று. புரட்சிகரமான மாற்றம் ஒன்றையே கேட்டீர்கள். ஆனால், பழகிய முறைகளைத் தவிர்த்து, அம்மாற்றத்தை ஏற்படுத்துவது மிகவும் கடினமாகும்.

விவசாயிகளுக்கு சங்கடங்களை ஏற்படுத்த வேண்டியது எனக்கு அவசியமில்லை. விவசாயிகளைப் பலவந்தமாகச் சேதனப் பசளையைப் பயன்படுத்துமாறு கூறுவதற்கும் எனக்கு அவசியமில்லை. ஆனால் நான் சரியானதையே செய்தேன். வாக்குறுதியளித்ததையே செய்தேன்.

இது ஒரு சவாலாகும். நான் அனைத்து விவசாயிகளிடமும் கேட்டுக்கொள்கின்றேன் நாம் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோம். அன்று கேட்ட புரட்சிகரமான மாற்றத்தை நிச்சயமாக நிறைவேற்றுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: