அந்நியச் செலாவணி பற்றாக்குறை – 9 இலட்சத்துக்கும் அதிகமான சாரதி அனுமதி பத்திர விண்ணபங்கள் குவிந்து கிடப்பதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவிப்பு!
Saturday, October 1st, 2022
சாரதி அனுமதி பத்திரம் அச்சிடுவதற்கான சிறப்பு அட்டையை இறக்குமதி செய்யத் தேவையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் கடும் நெருக்க நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அச்சிடப்பட வேண்டிய 9 இலட்சத்துக்கும் அதிகமான சாரதி அனுமதி பத்திர விண்ணபங்கள் குவிந்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பம் செய்யப்பட்ட ஐம்பதாயிரம் அட்டைகள் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் நாளுக்குநாள் புதிய சாரதி உரிமங்கள் விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
அந்நியச் செலாவணி பிரச்சனை ஓரளவுக்கு தீர்ந்தாலும், குவிந்து கிடக்கும் சாரதி அனுமதி பத்திரங்கள் அச்சிட்டு வழங்குவதற்கு கணிசமான காலம் எடுக்கும் என பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மாகாணசபைத் தேர்தல் டிசம்பரில்?
பிரதிப் பொலிஸ்மா அதிபர் தொடர்பில் 20ம் திகதி பொலிஸ் ஆணைக்குழு தீர்மானம்!
5,450 பட்டதாரிகளை ஆசிரிய சேவையில் உள்வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்...
|
|
|


