அத்தியாவசிய ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு பணம் வேண்டும் – அமைச்சரவையில் பேசவுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அறிவிப்பு!
Tuesday, April 4th, 2023
அத்தியாவசிய ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு தேவையான பணத்தை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் பிரகாரம் நாட்டின் நிதி ஒழுங்குமுறை தீர்மானங்களின் அடிப்படையில் அபிவிருத்திப் பணிகளுக்கு பணம் விடுவிக்கப்படவில்லை
எவ்வாறாயினும் அமைச்சரவையுடன் கலந்தாலோசித்து வருவாய் ஈட்டும் பணிகளுக்குத் தேவையான பணத்தை விடுவிப்பதற்குத் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் ஏற்றுமதியை அதிகரிக்க தேவையான பணத்தை விடுவிக்க வேண்டும் என்றும் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஆகவே இந்த விடயம் தொடர்பாக அடுத்த வாரம் அமைச்சரவையில் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
20 வீத ஆண்களும் 10 வீத பெண்களும் இலங்கையில் பாலியல் வன்புணர்வு!
அழிகிறது வடக்கின் கல்விப் புலம் - எச்சரிக்கிறது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் !
கொரோனா தொற்று வலயத்திலிருந்து தாவடி பிரதேசம் நீக்கம் – பாதுகாப்புத் தரப்பும் வெளியேற்றம்!
|
|
|


