கொரோனா தொற்று வலயத்திலிருந்து தாவடி பிரதேசம் நீக்கம் – பாதுகாப்புத் தரப்பும் வெளியேற்றம்!

Monday, April 13th, 2020

யாழ்ப்பாணத்தில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியின் கிராமமான தாவடி கிராமம் இன்று காலை குறித்த தொற்று வலயத்திலுருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்புத் தரப்பினரும் இங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

யாழ்ப்பாணம் தாவடியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் ஒருவர், கடந்த மார்ச் 22ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தமை அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா நோயாளியாக இனம் காணபட்டவரின் தாவடிக் கிராமம் சுகாதார தரப்பின் ஆலோசனைக்கு அமைய பாதுகாப்புத் தரப்பினரின் முற்றுகைக்குள் வைக்கப்பட்டுள்ளதுடன் கிராமத்தில் இருந்து வெளியேற மற்றும் உள்நுழைய தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்டு முடக்கப்பட்டிருந்த தாவடிக் கிராமம் 21 நாட்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை விடுவிக்கப்பட்டது.

இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் முடக்கப்படிருந்த தாவடிக் கிராமம் கோரோனா தொற்று இல்லாத பிரதேசமாக சுகாதாரத் துறையினரால் உறுதிப்படுத்தப்பட்டு அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக நடமாட அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது..

Related posts:


கொரோனா வைரசால் உலகின் ஒட்டுமொத்த தேசமும் மிகப்பெரும் பாதிப்பு - எச்சரிக்கும் உலக வங்கி!
இலங்கையின் பயிர்ச் செய்கையை அதிகரிப்பதற்குத் தேவையான தரமான விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கான யோசனைக்கு...
ஜெனீவாவில் ஆதரவாக பாகிஸ்தான் இருந்தது போல எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் – பாகிஸ்தான் உயா்ஸ்த...