20 வீத ஆண்களும் 10 வீத பெண்களும் இலங்கையில் பாலியல் வன்புணர்வு!

Thursday, January 17th, 2019

இலங்கையில் இருபது வீத ஆண்களும் பத்துவீத பெண்களும் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் எனத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த 2015 ஆம் ஆண்டு 1582 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பேராசிரியர் அஸ்வினி பெர்னாண்டோ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

96 வீதமான வன்புணர்வு சம்பவங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கு தெரிந்தவர்களாலும் அவர்களுக்கு மிகவும் தெரிந்த இடங்களிலும் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறான வன்புணர்வு சம்பவங்கள் தாய் இல்லாத குடும்பங்கள், பெற்றோர்கள் விவாகரத்து மற்றும் போதைக்கு அடிமையான தந்தையர்களாலேயே இடம்பெற்றுள்ளன.

இலங்கையில் 51 வீதமான சிறுவர்களே பெற்றோருடன் வாழ்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ரீதியான புனர்வாழ்வு அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts: