காட்டு யானைகளின் பாதுகாப்புக்காக புகையிரதங்களுக்கு வேகக்கட்டுப்பாடு!

Friday, August 19th, 2016

காட்டு யானைகள் நடமாடும் பகுதிகள் ஊடாக புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படும்போது வேகக் கட்டுப்பாட்டை விதிப்பதற்கு புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையிலும், மதவாச்சியிலிருந்து கிளிநொச்சி வரையிலும் புகையிரத மார்க்கங்களில் வேகக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என புகையிரத பொதுமுகாமையாளர் பி.ஏ.பீ. ஆரியரத்ன குறிப்பிட்டார்.

புகையிரதங்களில் மோதுண்டு காட்டு யானைகள் உயிரிழப்பதை தடுப்பதற்கான திட்டத்தின் கீழ், வேகக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.

செட்டிக்குளம் பகுதியில் புகையிரதகளில் மோதுண்டு 4 காட்டு யானைகள் நேற்று முன்தினம் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, வன விலங்குகள் திணைக்களத்தினருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதவிர குறிப்பி்ட்ட புகையிரத மார்க்கங்களின் வளைவுகள் அமைந்துள்ள இடங்களில் காணப்படும் காட்டுப் பகுதிகளை வெட்ட வெளியாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். புகையிரத புறப்படுவதற்கு முன்னர் காட்டு யானைகளை துரத்துவதற்கான ஒலி சமிக்ஞைகளை விலங்குகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் பரீட்சித்துப் பார்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Related posts: