அதி ஆபத்து வலையங்களில் பேருந்து சேவைக் கட்டணத்தை அதிகரிக்க அரச பேருந்து சபை முடிவு – போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, November 3rd, 2020

தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அல்லது கொரோனா தொற்று தொடர்பாக அதி ஆபத்து வலையங்களில் பேருந்து பயணசீட்டுக்கான கட்டணத்தை அதிகரிக்க அரச பேருந்துகள் முடிவு செய்துள்ளன.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது கொரோனா தொற்று அதிகமாக உள்ள இடங்களில் அதிகரித்த பேருந்து கட்டணங்களுடன் இயங்கும் என போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் உள்ள பேருந்துகள் கிடைக்கக்கூடிய இடங்களின் எண்ணிக்கையின்படி மட்டுமே பயணிகளுக்கு இடமளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, இதுபோன்ற பகுதிகளில் இயங்கும் பேருந்துகளுக்கான கட்டணங்களை அதிகரிப்போம் என்றும் மற்றய அனைத்து பகுதிகளிலும், பேருந்து கட்டணத்தில் எதுவித மாற்றமும் ஏற்படாது இருக்கும் என்றும் இராஜாங்க திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சுகாதார அதிகாரிகள் சான்றிதழ் எதனையும் வழங்கவில்லை – தேர்தல் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளது என தேர்தல்க...
ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று: கொழும்பு மத்திய தபால் பரிமாறல் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
சவால்களை வெற்றிகொண்டு சுற்றுலா தொழிற்துறையின் புதிய பயணத்திற்கு தயாராகுங்கள் - ஜனாதிபதி வலியுறுத்து!