ஜனாதிபதியிடம் தீர்வுகோரும் அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம்!

Monday, September 19th, 2016

அரச வைத்­தி­யர்­களின் பிள்­ளை­களை சேர்த்­துக்­கொள்­வதில் ஏற்­பட்­டுள்ள பிரச்­சினை தொடர்பிலும், அது தொடர்­பாக கல்­வி­ய­மைச்சில் மேற்­கொண்ட ஆர்ப்­பாட்­டத்­தின்­போது வைத்தியர்க­ளுக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட இடை­யூ­றுகள் மற்றும் அரா­ஜ­கத்­தன்மை தொடர்பிலும் ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் சுகா­தார அமைச்­சரும் உடன் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

இது தொடர்பில் அச்­சங்கம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

வெளி­நா­டு­களில் பணி­பு­ரிந்­து­விட்டு மீள இலங்­கைக்கு வந்­துள்ள வைத்­தி­யர்­களின் பிள்ளைகளுக்கு உரிய தேசிய பாட­சா­லை­களை வழங்­கக்­கோரி கடந்த வாரம் கல்­வி­ய­மைச்சில் இரவு முழு­வதும் தங்­கி­யி­ருந்து ஆர்ப்­பாட்டம் மேற்­கொண்­டி­ருந்தோம். இதன்­போது கல்வியமைச்சில் உள்ள அதிகாரிக­ளினால் எமது வாக­னங்­க­ளுக்கு சேதம் விளை­வித்தும், உணவுப்­பொ­ருட்­களை கொண்டு வர விடா­மலும் பல இடை­யூ­று­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன.

எங்­க­ளது கோரிக்­கை­களை கொஞ்­சமும் பொருட்­ப­டுத்­தாது ஏற்­ப­டுத்­தப்­பட்ட இவ்­வா­றான அராஜகத்தன்­மை­யான தாக்­கு­தல்கள் மிகவும் கண்­டிக்­கத்­தக்­க­வை­யாகும்.

வளங்­களை பிர­ப­ல­மான பாட­சா­லை­க­ளுக்கு மட்டும் வழங்கிவிட்டு கிரா­மப்­புற பாட­சா­லை­களை புறக்­க­ணித்­த­மைக்கு கல்­வி­ய­மைச்­சரும் அர­சி­யல்­வா­தி­களுமே கார­ண­மாவர்.

நாட்டில் உள்ள அனைத்து பாட­சா­லை­க­ளையும் அபி­வி­ருத்தி செய்­தி­ருப்­பார்­க­ளாயின் நாம் பிரபல பாட­சா­லை­களை நோக்கி சென்­றி­ருக்க தேவை­யில்லை. அவ்­வா­றி­ருக்கும் போது தற்போது நாம் எமது பிள்­ளை­க­ளுக்கு பிர­பல பாட­சா­லை­களை தேடு­வதை கல்­வி­ய­மைச்சர் எமக்­கெ­தி­ராக ஊடகங்க­ளி­னூ­டாக பூதா­க­ர­மாக காண்­பிக்க முனை­கின்றார்.

இந்­நி­லையில் பாட­சா­லை­களின் கல்வி உரிமை தொடர்­பிலும் பிள்­ளை­களின் இட­மாற்றம் தொடர்பிலும் கருத்து தெரிவிக்கும் ஆசிரிய சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலினும் மௌனமாக இருப்பது வேடிக்கையாக உள்ளது. குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சுகாதார அமைச்சரும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

gmoa

Related posts: