வடக்கில் 488 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவில்லை !

Tuesday, October 13th, 2020

நேற்றுமுன்தினம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 18 ஆயிரத்து 387 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த போதிலும் 488 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 897 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 4 ஆயிரத்து 818 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

இதே போன்று வவுனியா மாவட்டத்தில் 3 ஆயிரத்து 46 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 3 ஆயிரத்து 14 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 570 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 2 ஆயிரத்து 531 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 439 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 2 ஆயிரத்து 325 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 107 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் ஆயிரத்து 961 மாணவர்கள் மட்டுமே பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

இவற்றின் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் 146 மாணவர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 114 மாணவர்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 157 மாணவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 39 மாணவர்களும், வவுனியா மாவட்டத்தில் 32 மாணவர்களும் பரீட்சைக்குத் தோற்றவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: