நாடாளுமன்றத்தை தாக்க திட்டமிட்டதா ஐ.எஸ்? விசாரணையில் வெளியான தகவல்!
Thursday, April 25th, 2019
நாடாளுமன்றத்தில் குண்டுத்தாக்குதல் நடாத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலாங்கொட- கிரிமெட்டிதென்ன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான 6 அனுமதி பத்திரங்கள், 2 குண்டுகள், வரைபடம், 2 தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
27 வயதான குறித்த இளைஞன் கொழும்பு உணவகம் ஒன்றில் பணி செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞளை பலாங்கொட நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
பொலிஸாரின் அத்துமீறல்கள் வடக்கு – கிழக்கிலேயே அதிகம் - தேசிய பொலிஸ் ஆணைக்குழு விசனம்!
இலங்கை எதிராக விதிக்கப்பட்டிருந்த தற்காலிக பயணத் தடையை பல நாடுகள் நீக்கியுள்ளன!
எதிர்வரும் ஆண்டளவில் கிராம மற்றும் பாடசாலை மட்டத்தில் விளையாட்டுத்துறை வளர்ச்சி அடையும் – அமைச்சர் ந...
|
|
|


