அதிக வெப்பம் – பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார அமைச்சினால் அவசர அறிவுறுத்தல்!.

அதிக வெப்பமான காலநிலையை கருத்திற்கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார அமைச்சினால் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, அதிக வெப்பநிலை நிலவும் நாள்களில் விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலை நிலவும் நாள்களில் இல்ல விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகளை நடத்துவதை தவிர்க்குமாறும் மாணவர்களை அதிகளவில் நீர் அருந்தச் செய்யுமாறும் சுகாதார அமைச்சின் குறித்த அறிவுறுத்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் வறட்சியான காலநிலையில் இன்றுமுதல் ஓரளவு மாற்றத்தை எதிர்பார்க்க முடியுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வெளிநாடுகளிலிருந்து மேலும் 745 இலங்கையர்கள் இன்றும் நாட்டிற்கு வந்தனர்!
தீவகத்திற்கென தனியான போக்குவரத்து சாலை உருவாக்கப்டபட வேண்டும் – ஈ.பி.டி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உ...
நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்ட பாதுகாப்பு படையினருக்கு ஜனாதிபதி உத்தரவு!
|
|