புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 1,500 வீதிகள் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு!

Sunday, November 7th, 2021

அதிவேக நெடுஞ்சாலைகளை இலகுவாக அணுகக்கூடிய  வகையில் ஒரு இலட்சம் உள்ளக, கிராமப்புற மற்றும் கிளை வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 1,500 வீதிகள் இன்று  மக்களிடம் கையளிக்கப்பட்டன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வீரகெட்டிய – மண்டாடுவ மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

முன்பதாக அனைத்து மாவட்டங்கள் மற்றும் தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கியதாக இந்த 1,500 வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருணாகல் வரையிலான 42 கிலோமீற்றர் பகுதி இம்மாதம் திறக்கப்படவுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பொது போக்குவரத்து சேவைகளைச் செயற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மத்திய அதிவேக நெடுஞ்சாலை நான்கு கட்டங்களாக அமைக்கப்படவுள்ளன.

இதன்படி கடவத்தையிலிருந்து மீரிகம, மீரிகமவிலிருந்து குருநாகல், குருணாகலிலிருந்து தம்புள்ளை மற்றும் தம்புள்ளையிலிருந்து கலகெதர வரையென 4 கட்டங்களாக அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: