வெளிநாடுகளிலிருந்து மேலும் 745 இலங்கையர்கள் இன்றும் நாட்டிற்கு வந்தனர்!

Thursday, August 20th, 2020

கொரோனாவால் குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் சிக்கியிருந்த 745 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி கட்டார், டோஹாவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான QR-668 என்ற விமானத்தின் மூலம் 20 இலங்கையர்கள் அதிகாலை 1.31 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்தியாவின், சென்னையிலிருந்து இலங்கை ஏயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் -1126 என்ற விமானத்தில் 290 இலங்கையர்கள் அதிகாலை 5.08 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அதேபோல குவைத்திலிருந்து இலங்கை ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் -230 என்ற விமானத்தில் 266 இலங்கையர்கள் அதிகாலை 4.22 மணியளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இலங்கை ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் -226 என்ற விமானத்தில் 169 இலங்கையர்கள் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை நாட்டை வந்தடைந்த அனைவரிடமும் பி.சி.ஆர்.சோதனை முன்னெடுக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

Related posts:


ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் சிவஞானசோதி நியமிப்பு!
இரண்டாம் கட்டமாக வேறு தடுப்பூசிகளை வழங்க முடியாது - தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள மக்கள் அச்சப்படத்தேவையி...
உரக் கலன்கள் வெடிப்பு சம்பவத்தை பெரிதுபடுத்துவதில் நியாயமில்லை - அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெர...