ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கான அங்கீகாரம் காழ்ப்புணர்ச்சி கொண்ட தமிழ் அரசியல்வாதிகளுக்கு பேரிடி. – புத்திஜீவிகள் சுட்டிக்காட்டு

Monday, May 9th, 2016

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் நடாத்தப்பட்ட தேசிய எழுச்சி மாநாட்டின் வெற்றிக்கு மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், கல்விமான்கள், சமூக நலன்விரும்பிகள், புலம்பெயர்வாழ் உறவுகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற தேசிய எழுச்சி மாநாட்டிற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டிருந்தனர்.

அத்துடன், கட்சியின் மாநாட்டுப் பிரகடனத்தையும் உளப்பூர்வமாக மகிழ்ச்சி ஆரவாரத்துடன் ஏற்றுக்கொண்டிருந்த நிலையில், எழுச்சி மாநாடு களைகட்டியிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

இந்நிலையில், சமகாலத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கொள்கை மற்றும் அதன் அரசியல் நிலைப்பாடு என்பன தொடர்பில் கட்சியின் எதிர்கால செயற்திட்டங்கள், அரசியல் முன்னகர்வுகள் என்பன தொடர்பில் பிரகடனத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநாட்டில் கலந்து கொண்டிருந்த மக்கள் தொகையின் ஊடாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கான அங்கீகாரம் மற்றும் மக்களின் வரவேற்பு கட்சி மீது அரசியல் பகை உணர்வு, காழ்ப்புணர்ச்சி கொண்ட தமிழ் அரசியல்வாதிகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது என்பதே யதார்த்தமாகும்.

இந்நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நடைமுறை யதார்த்த வழிமுறையிலான அரசியல் கோட்பாடுகள், கொள்கைத்திட்டங்கள் எதிர்காலத்தில் மக்கள் நலன்சார்ந்த செயற்திட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் என்பதைத் திடமாக நம்ப முடியும்.

அதனடிப்படையிலேயே தேசிய எழுச்சி மாநாட்டுக்கு மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், கல்விமான்கள், சமூக நலன்விரும்பிகள், புலம்பெயர்வாழ் உறவுகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நேரடியாகவும், தொலைபேசி வாயிலாகவும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 7

8

01

9 (1)

10

Related posts: