அதிகளவான வீதித்தடைகள் – பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டு இறுக்கமான கண்காணிப்பில் யாழ் நகர்!

Tuesday, May 25th, 2021

மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்காக யாழ்.நகரில் அதிகளவான வீதித்தடைகள் அமைக்கப்பட்டு கடுமையான சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பயணத்தடை, இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியுடன் சில கட்டுப்பாடுகளுடன் தளர்ந்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இரவு 11 மணிமுதல் அது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் யாழ்.நகரின் பிரதான வீதிகள் மற்றும் முக்கிய பகுதிகளில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்ப தரப்பினர் மற்றும் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவசர தேவை தவிர்ந்த ஏனைய வாகனங்கள் உள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன்  அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வெளியே வருகின்றவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன் அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் மாத்திரமே யாழ்.நகரில் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நெல் அறுவடை தேவையான அளவை எட்டியுள்ளது - நாட்டில் செயல்படும் "அரிசி மாபியாக்களே சீர்குலைக்க முயற...
இயந்திரம் பழுது - நாகை மாவட்ட மீனவா்கள் 4 போ் யாழ்.வல்வெட்டித்துறையில் தஞ்சம் - மீளவும் தமிழகத்திற்க...
நாட்டில் 23 சதவீதமானோர் நீரிழிவு நோயினால் பாதப்பு - உட்சுரப்பியல் நிபுணர்கள் கல்லூரி மேற்கொள்ளப்பட்...

நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது குறித்து ஆணைக்குழு கூடி தீர்மானிக்க வேண்டும் – ஆணைக்குளுவின் தலைர் மகிந...
எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட பொருட்களுக்கான கட்டணத்தை செலுத்த திறந்த சந்தைகளில் அமெரிக்க டொலரை...
இன்று நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு!