நாட்டில் 23 சதவீதமானோர் நீரிழிவு நோயினால் பாதப்பு – உட்சுரப்பியல் நிபுணர்கள் கல்லூரி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தகவல்!

Sunday, November 5th, 2023

நாட்டில் 23 சதவீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை உட்சுரப்பியல் நிபுணர்கள் கல்லூரியினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது நீரிழிவு நோயினால் ஆபத்தில் உள்ள உலகின் முதல் 10 நாடுகளுக்குள் உள்ளதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நீரிழிவு நோய்த் தொடர்பில், கருத்து தெரிவித்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறை பேராசிரியர் வைத்தியர் பிரசாத் கட்டுலந்த, நீரிழிவு நோய் காரணமாக இலங்கையில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

2006 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இலங்கையின் சனத்தொகையில் 10 சதவீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.

அத்துடன் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமான நீரிழிவு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ துறை பேராசிரியர் வைத்தியர் பிரசாத் கட்டுலந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: