அடுத்த வாரம் இந்தியாவிலிருந்து 2 மில்லியன் முட்டை இறக்குமதி – இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தெரிவிப்பு!
Wednesday, February 22nd, 2023
அடுத்த வாரம் இந்தியாவில் இருந்து 2 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் என இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் சமிலா இத்தமல்கொட தெரிவித்தார்.
இறக்குமதி தொடர்பாக கால்நடை துறை மூலம் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்
இதேவேளை, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன கூறுகையில் முட்டைக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், முட்டையின் விலை ரூ.48 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
5.5 மில்லியன் தேவை இருந்தாலும் தற்போது 5 மில்லியன் முட்டைகள் மாத்திரமே உற்பத்தி செய்யப்படுவதாக சரத் அத்தநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
O/L அனுமதி அட்டையில் மாற்றம் செய்ய வேண்டுமா? 29 வரை கால அவகாசம்!
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் மே மாத இறுதியில்!
எதிர்வரும் வியாழன்முதல் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம் - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறு...
|
|
|


