அடுத்த வருடம் புதிய 10 ஆயிரம் புதிய தொழில்வாய்ப்புக்கள் நாட்டிற்குக் கிடைக்கும் – இராஜாங்க அமைச்சர் அஜித்!
Sunday, December 20th, 2020
புதிய தொழில்வாய்ப்புக்கள் பத்தாயிரத்தை ஏற்படுத்தும் மூன்று வெளிநாட்டு முதலீடு திட்டங்கள் அடுத்த வருடம் நாட்டிற்குக் கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று நிகழ்ச்சித் திட்டங்களும் பாரிய அளவிலான வேலைத்திட்டங்களாகும். இதன் மூலம் 550 பில்லியன் ரூபா இலங்கைக்கு கிடைக்கும்.
அடுத்த வருடத்தில் கிடைக்கும் முழு வெளிநாட்டு முதலீடுகளின் பிரகாரம் நாட்டில் சுமார் ஒரு லட்சம் தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
துறைமுக நகரில் சர்வதேச மாநாட்டு மண்டபம், ஹம்பாந்தோட்டை தொழிற்பேட்டையின் இறப்பர் உற்பத்தி தொழிற்சாலை மற்றும் மருந்து உற்பத்தி நிலையம் என்பன இந்த மூன்று நிகழ்ச்சித் திட்டங்களாகும்.
Related posts:
நவீன உற்பத்தித் துறையில் முன்னிலை வகிக்க நாம் தயார்- ஜனாதிபதி!
யாழ்ப்பாணத்தில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் – பொதுமக்களுக்கு மாவட்ட செயலகம் எச்சரிக்கை!
12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அரசாங்கம் கவனம் - இராஜாங்க அமைச்...
|
|
|


