ஆலயத்திற்கு செல்லும் வீதியில் 20 விபத்துக்கள்!

Thursday, May 31st, 2018

இரண்டு நாட்களாக இடம்பெற்ற வற்றாப்பளை அம்மன் ஆலய உற்சவத்தில் கலந்து கொண்டு சென்ற பொது மக்கள் போக்குவரத்தின் போது சுமார் இருபதுக்கு மேற்பட்ட வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக புதுகுடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் தெரிவிக்கையில் கடந்த 28ம், 29ம் திகதி இடம்பெற்ற வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வில் நாட்டின் பல பகுதிகளிலில் இருந்து அயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர். இவர்கள் பயணித்த போக்குவரத்தின் போது சுமார் 20 க்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. ஆலயத்துக்கு செல்லும் வீதிகளில் பயணித்த வாகனங்கள் வாகன நெரிசல், அதிவேகமாக வாகனத்தை செலுத்தியதாலும், வீதி போக்குவரத்து வீதிகளை சரியாக கடைபிடிக்க தவறியதாலுமே; இவ்வாறான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு விபத்துக்களின் போது காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

28-05-2018 அன்று ஒட்டுச்சுட்டான் வீதியில் ஆடு ஒன்றுடன் மோதுண்ட முத்துஐயன்கட்டு பகுதியைச் சேர்ந்த தா. விக்னேஸ்வரன் (வயது-46), கொக்குத்தொடுவாய் வீதியில் கப் ரக வாகனம் வீதியினை விட்டு விலகி விபத்துக்கானதில்  புத்தளம் பகுதியை சேர்ந்த அன்ரன் தனங்க பர்ணாந்து (வயது-32), பிரியந்த அர்ச்பீரிஸ் (வயது-29), அஞ்ச பர்ணாந்து (வயது-47) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

அம்பலவன் பொக்கனை, புதமாத்தளனை சேர்ந்த ப.பவேந்திரன் (வயது-07) என்ற சிறுவன் வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகி உள்ளான்.

முள்ளியவளை புகுதியில் ஆலமரம் முறிந்ததில்  அலம்பிலை சேர்ந்த வடிவேலு சார்ள்ஸ் (வயது-19), ஒலுமடுவை சேர்ந்த  இராசேந்திரம் கோகுலன் (வயது-17), ஆகியோர் காயத்துக்குள்ளாயினர்.

வள்ளிபுனம் புதுகுடியிருப்பைச் சேர்ந்த நாகராசா அருண்( (வயது-21),சிவராசா நிசாந்தன் (வயது-20) ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

29-05-2018 கள்ளப்பாடு, முல்லைத்தீவினை சேர்ந்த  சி.அந்தோனி (வயது-61), ரவீந்திரன் தர்சன்( வயது-28),

கிறிநொச்சி அக்கராயனைச் சேர்ந்த ரி.விமலராசா (வயது-31), நெடுங்கேணியை சேர்ந்த எஸ். உதயகுமார்(வயது-50) ஆகியோர் காயங்களுக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: