அடுத்த வருடம்முதல் சகல பரீட்சைகளும் உரிய நேரத்தில் நடத்தப்படும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, September 18th, 2024

அடுத்த வருடம் முதல் அனைத்து பரீட்சைகளும் தாமதமின்றி நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி பாடசாலை தவணை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் எவ்வாறாயினும், மூன்றாவது தவணை இரண்டு வாரங்களுக்கு நடத்தப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, ஜனவரி 20 ஆம் திகதி,முதல் தவணை ஆரம்பமாகவுள்ளதாகவும், மாணவர்களுக்கான சீருடை மற்றும் பாடப்புத்தகம் என அனைத்தும் தயாராகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்த கல்வி அமைச்சர், உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் கல்விப் பொதுத் தராதர பரீட்சை பெறுபேறுகளும் இன்னும் இரு வாரங்களில் வெளியிடப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்

000

Related posts: