விவசாயிகளிடமிருந்து நாடு நெல்லை 55 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் – விவசாய அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, September 14th, 2021

ஒரு கிலோகிராம் நாட்டு நெல்லை 55 ரூபாவுக்கு விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,  விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் நாடு நெல்லை 55 ரூபாவுக்கு நாளைமுதல் கொள்வனவு செய்யுமாறு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக ஒரு கிலோகிராம் நாடு நெல் 50 ரூபாவுக்கு விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

எமது மக்களுக்கு ஏமற்றங்கள் இனியும் வேண்டாம் - ஈ.பி.டி.பியின் வவுனியா மாவட்ட நிர்வாவ செயலாளர் திலீபன்...
தேசிய அளவில் சிந்தித்து செயற்படக்கூடிய அரசியல் முறைமையொன்று நாட்டுக்கு அவசியம் - ஜனாதிபதி ரணில் விக்...
ஹோர்முஸ்நீரிணை திறந்தே உள்ளது – எமது கடற்படையுடன் ஒத்துழைக்க வேண்டும் – ஈரான் வெளியுறவு அமைச்சர்!