ஹோர்முஸ்நீரிணை திறந்தே உள்ளது – எமது கடற்படையுடன் ஒத்துழைக்க வேண்டும் – ஈரான் வெளியுறவு அமைச்சர்!
Thursday, May 14th, 2026புதுடில்லியில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகிள்க இந்தியா சென்றுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “ஹோர்முஸ் நீரிணை அனைத்து வணிகக் கப்பல்களுக்கும் திறந்தே உள்ளது, ஆனால் அவை எங்கள் கடற்படையினருடன் ஒத்துழைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
நீரிணையில் ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு அமெரிக்காவையே அவர் குற்றம்சாட்டினார்.
தெஹ்ரான் கப்பல் போக்குவரத்திற்கு எந்த தடைகளையும் ஏற்படுத்தவில்லை என்றும், வாஷிங்டனின் முற்றுகையை சட்டவிரோதமானது எனவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
ஹோர்முஸ் நீரிணையில் ஈரானியப் படைகளின் கட்டுப்பாடு தொடரும் என்றும், ஒத்துழைக்கும் வணிகக் கப்பல்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அராக்சி உறுதிப்படுத்தினார்
Related posts:
இலங்கையில் தனி நபரொருவரின் குறைந்தபட்ச மாதாந்தச் செலவு 5 ஆயிரத்து 353 ரூபாவாக பதிவு - தொகை மதிப்பு ம...
எரிபொருள் - எரிவாயு விநியோகம் தொடர்பான முறைக்கேடுகளை அறிவிக்க விசேட இலக்கம்!
வைரஸின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - இராஜாங்க அமைச்சர் விசேட சீ...
|
|
|


